தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்டச் செயலாளர்களுக்கு விடுத்துள்ள கடிதம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கடிதத்தை மீள அழைக்க தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.