இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு கௌசல்யா நவரத்னவும், செயலாளர் பதவிக்கு இசுரு பாலபடபெந்திவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று நண்பகல் 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், வேறு வேட்பாளர்கள் எவரும் வேட்புமனுக்களை சமர்ப்பிக்காத பட்சத்தில், வேட்புமனு தாக்கல் செய்த இருவரும் போட்டியின்றி பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.