மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை தமிழரசு கட்சி செலுத்தியது ..

மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி சார்பாக நேற்றைய தினம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி சார்பாக நேற்றைய தினம் புதன்கிழமை(11) காலை 11.30 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்