தனுஷ்க குணதிலக குறித்த நீதிமன்றின் உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு பெப்ரவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (12) சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹோட்டலில் சிட்னி பொலிஸாரால் தனுஷ்க குணதிலக்க கடந்த நவம்பர் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தனுஷ்க குணதிலக்க 11 நாட்கள் பார்க்லீஹில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 02 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப் பிணையில் நவம்பர் 17ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தனுஷ்க குணதிலக்கவுக்கு பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, அதில் தனுஷ்க இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இது தவிர, பிணை நிபந்தனைகளில் மனுதாரரை அழைப்பதையோ அல்லது தொடர்பு கொள்வதையோ தவிர்ப்பது மற்றும் டிண்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும்.

குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அந்த கடுமையான விதிகள் தொடர்ந்தும் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு பெப்ரவரி 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.