உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வர்த்தக சங்கம்,கடைகளை அடைத்து ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் ஆரம்பித்த தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

நீராகாரம் உணவு ஏதுமின்றி ஒன்பதாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகின்ற நிலைமையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு முச்சக்கர வண்டிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிய கடைகளை பூட்டி போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்