கட்டார் செரிட்டி இலங்கையில் மீண்டும் திறக்கப்பட்டது!

இலங்கை அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பயங்கரவாத தடை நீக்கப்பட்டதை அடுத்து, கட்டார் செரிட்டி என்ற தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது.

கட்டார் செரிட்டி கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். மேலும் இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளது. எனினும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இது பல்வேறு குற்றச்சாட்டுகளால் தடைசெய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2022 ஜூன் 30 ஆம் திகதி அன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் செரிட்டி நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் குறித்த தடை நீக்கப்பட்டது. கட்டார் செரிட்டி 2023 ஆம் ஆண்டில் 11.7 மில்லியன் அமெரிக்க டெலர் பெறுமதியிலான மனிதாபிமான உதவிகளை அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். தேவைக்கேற்ப அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நன்கொடை ஒதுக்கப்படும் என அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்