முட்டை விலை வாராந்தம் கணக்கிடப்படும்

முட்டை உற்பத்தி செலவை வாராந்தம் கணக்கிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் முட்டையின் விலை தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் டிசம்பர் வரை ஒரு முட்டையின் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு மாதந்தம் வெளியிட்டது.

இந்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் முட்டையின் உற்பத்தி விலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கணக்கீடுகளின்படி, ஒரு முட்டையை நுகர்வோருக்கு இறுதியாக ரூ.50க்கு வழங்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீப வாரங்களில் முட்டை விலை ரூ.70 வரை உயர்ந்திருந்தது.

எனினும், முட்டை இறக்குமதி செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.