வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு.

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் டிசம்பர் மாதத்தில் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிசம்பர் 2021 இல் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 325.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.