பரீட்சை நடக்கும் காலத்தில் மின்வெட்டு இல்லை

இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.

அதற்காக 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் பரீட்சையை நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்