வவுனியா கிறிஸ்தவ தேவாலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு!

வவுனியா நகரில் உள்ள இலங்கை திருச்சபையில் (தூய ஆவியானவர் ஆலயம்) தைப்பொங்கல் நிகழ்வும் விசேட வழிபாடும் இன்று (15) இடம்பெற்றது

வவுனியா குடியிருப்பு ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் (அங்கிலிக்கன்) உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் உழவர் திருநாள் பண்டிகையை இன்றைய தினம் சிறப்பாக கொண்டாடியதுடன் விசேட வழிபாடும் இடம்பெற்றுள்ளது

இன்று காலை 6மணியளவில் தேவாலயத்தின் பிரதான குருவானவனர் வணக்கத்துக்குறிய ஜோசுவா சதீஸ் கிறிஸ்பஸ் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது

இந்நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.