வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அறிக்கைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிசீலனைக்கு பின் கடந்த மாதம் 5ஆம் திகதி இது தொடர்பான மனு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மனு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சிடம் இருந்து அறிக்கை கோரவும் குழு தீர்மானித்துள்ளது.

அறிக்கை கிடைத்த பின், மனு மீதான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எ​ன பொது மனுக்கள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் போசாக்கு நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தமைக்காக வைத்தியர் சமல் சஞ்சீவவை பணி இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.