மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும்; கருத்தரங்குகள் நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக தகவல் இருந்தால் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற உடனடி தொலை பேசி, 0112 785212 அல்லது 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.