தேர்தலுக்கான சின்னம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கை சின்னத்தில் மாத்திரம் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, புத்தளம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஹெலிகொப்டர் சின்னத்தில் மாத்திரம் போட்டியிடவும் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கை சின்னம் மற்றும் ஹெலிகொப்டர் சின்னம் இரண்டையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.