முட்டை இறக்குமதிக்கான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் !

முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறியப்படுத்தியுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த திணைக்களத்தின் விசேட நிபுணர் குழுவினால் கலந்துரையாடல் நடத்தப்பட்டு குறித்த வழிகாட்டுதல் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்றைய தினம் அனுமதி கிடைக்குமாயின் 3 அல்லது 4 நாட்களுக்குள் முட்டையை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக முட்டையை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கேள்விமனு கோரப்பட்டது.

விண்ணப்பங்களை முன்வைத்த 22 பேரில் 2 பேருக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்தியாவில் கோழி காய்ச்சல் பரவுவதால் முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் மாறுபட்ட விலைகளில் முட்டை விற்பனை செய்யப்படுதவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.