ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

ஓடும் லங்கம பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி குருதுவத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி உடஹிந்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஹசித தேவிந்திர என்ற 15 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் நாவலப்பிட்டி நகரில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விட்டு லங்கம பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் நேற்று பிற்பகல் பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்ட வேளையில் கால் தவறி பஸ்ஸில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாவலப்பிட்டி குருதுவத்தை பொலிஸார் நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பஸ்சை நிறுத்த முன்னர் பாடசாலை மாணவர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸின் சாரதியை சந்தேகத்தின் பேரில் குருவத்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சந்தேகத்துக்குரிய சாரதியை கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.