திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களின் அனுசரணையில் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 08
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை அர்ப்பணிப்பாக – இரவு, பகல் தூக்கமின்றி பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கு கனடாவில் வதியும் திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களின் அனுசரணையில் நோயாளர்களைப் பராமரிக்கும் 30 தொண்டர்களுக்கு பொங்கல் பானைகள், பொங்கல் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் றெமாள்ஸ், வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய லயன் சி.ஹரிகரன் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.