நுவரெலியாவில் 2 சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திங்கட்கிழமை (16.01.2023) செலுத்தியது.

திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளுக்கும் ஜக்கிய மக்கள் சக்தி போட்டியிடவுள்ள நிலையில் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.