யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் 77ஆவது நிறுவுனர்கள் தினம்..

யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் 77ஆவது நிறுவுனர்கள் தினம் 16.01.2023 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் ஆ.சி நடராசா அரங்கில் கல்லூரி முதல்வர் வே. த ஜெயந்தனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஞானலிங்கம் ஆதவனும், கௌரவ விருந்தினராக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனும் கலந்து கொண்டனர்.
அதன்போது வயாவிளான் கல்லூரியின் நிறுவநர்களான ஈழகேசரி நா. பொன்னையா மற்றும் அமரர் சட்டத்தரணி வல்லிபுரம் இராசநயகத்தின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் இராசநாயகம் பிரபந்தம் நூலின் மறுபதிப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.