விகாரைக்கு அருகில் விபசார விடுதி -மூன்று இளம் பெண்கள் கைது

கண்டி அஸ்கிரிய விகாரைக்கு அருகில் விபசாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளம் யுவதிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் விடுதியையும் முற்றுகையிட்டுள்ளனர்.

கண்டி, தம்மசித்தி மாவத்தையில் அஸ்கிரிய மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பாரிய வீடொன்றில் விபசார நிலையம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் அவ்விடத்தை சுற்றிவளைத்தனர். இதன்போதே மூன்று இளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இளம் பெண்களை விற்பனை செய்யும் முகவர் தொடர்பிலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதிகள் கண்டி, பிலியந்தலை, மொறட்டுவ மற்றும் நுகவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

மொறட்டுவையில் வசிக்கும் முகாமையாளரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பயன்படுத்தும் சாதனமொன்றையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டி காவல் தலைமையக பிரதான காவல் பரிசோதகர் ரசிகசம்பத் தலைமையில் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பிரதான காவல் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.