முள்ளிவாய்க்காலில் கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் இனம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று(18.01.2023) குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

முள்ளிவாய்க்காலில் கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு | Recovery Of Firearms In Mullivaikal

மீட்கப்பட்ட துப்பாக்கிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.