போதைப்பொருள் பாவனைக்காக சிறுவனைச் சுமந்து யாசகம் பெற்ற பெண்!

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதுடன், நாளுக்குநாள் போதைப்பொருளுடன் தொடர்புடைய கைதுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முப்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முயற்சிகளை எடுத்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

குறித்த போதைப்பொருள் பாவனைக்கு இலங்கையில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடிமையாவது வெகுவாக அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்காக சிறுவனைச் சுமந்து யாசகம் பெற்ற பெண்! | Drugs Case Beggar Woman Arrested Sri Lanka Police

அந்தவகையில், போதைப்பொருள் வாங்குவதற்காக 5 வயது சிறுவனை சுமந்தவாறு யாசகம் எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் யாசகம் எடுத்த 35 வயதுடைய குறித்த பெண்ணை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அவர் பல்வேறு போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.