கை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செவ்வாய்கிழமை  (17.01.2023) செலுத்தியது.

செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை உள்ளிட்ட 11 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ள நிலையில் 11 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.