பல கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் (19/01/2023) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்கி, மருந்து சீட்டு கொடுத்தாலும், நோயாளிகள் அதிக பணம் செலவழித்து அந்த மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்கள், செவிலியர்களின் சம்பளத்தில் வரிப்பணம் வசூலிக்கப்படுவதால் இவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையால் வைத்தியர்கள், செவிலியர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் வைத்தியசாலைகளை எதிர்காலத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு விதிக்கப்படாமையால் நாடு மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளை தலைவர் ரொஷான் சிறிவர்தன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.