முட்டை இறக்குமதி மூலம் நிதி மோசடியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது

முட்டை இறக்குமதிக்கு தேவையான சூழலை அரசாங்கமே உருவாக்கி, நிதி மோசடியை முன்னெடுக்க முயற்சிக்கப்படுவதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முட்டைக்கான உற்பத்தி செலவு 12 ரூபா 90 சதமாக இருந்தது. பின்னர் அந்த தொகை 35 ரூபாவை கடந்துள்ளது.

இதனையடுத்து, தற்போது தனிநபர் ஒருவர் முட்டை ஒன்றை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் முட்டையை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். இந்தநிலையில், உற்பத்தி செலவை குறைக்க நடவடிக்கை எடுத்தால் முட்டை விலையை குறைக்க முடியும்.

எனினும், நிதி மோசடி செய்யும் நோக்கில் தற்போது முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.