அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும்

அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் எப்போதும் தோல்வியடைந்தவர்கள் என நேற்றைய விவாதத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.

அவர்கள், தமது அமைச்சை முன்கொண்டு செல்ல முடியாமல், அமைச்சுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள். சரியாயின், அடுத்த அரசாங்கத்தில், நாட்டின் ஒவ்வொரு அமைச்சும், முன்னேற்ற மீளாய்வுக்கு உட்படுத்தும் முறைமையைத் தயாரிக்க வேண்டும்.

இதன் மூலம், குறித்த அமைச்சர், குறித்த காலப்பகுதியில், ஏதோனும் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தாலோ அல்லது குறித்த அமைச்சிற்குள் ஏதேனும் முன்னேற்றத்தை ஏற்பத்தி இருக்காவிட்டால், உடனடியாக பதவிநீக்க வேண்டும். அவ்வாறானதொரு முறைமை நாட்டுக்கு அவசியமாகும்.

அதுபோன்ற முறைமை இல்லாமையால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று, கதிரையில் இருந்து கொண்டே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக  அவர் மேலும்  குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.