இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன.

அந்தவகையில், பல தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த விடயத்தை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி! | Many Trade Unions Protest In Colombo Today

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.