போதைப்பொருள் கடத்தல் தலைவி அதிரடி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான திலினி நிஷாதி(டினா) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தலைவி அதிரடி கைது - விசாரணையில் வெளிவந்த திட்டங்கள் | Drug Trafficking Business Leader Arrested

டினா என்ற குறித்த பெண், போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக்கட்டா எனப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவின் போதைப்பொருள் குழுவின் தலைவி என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் ஹரக்கட்டாவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு இந்தப் பெண் தலைமை தாங்கியவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் 12 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பெண்ணின் கணவர் புலா எனப்படும் தினேஷ் மதுசங்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த பெண் கொலை செய்யப்பட்ட எம்.டபிள்யூ. மதுர லக்ஷிதா என்ற மிதிகம ஹிச்சி மல்லியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், ஹரக்கட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் ஹிச்சி மல்லியை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக திஹாகொட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.