காதலனை கொலை செய்த பெண் – போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது

அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இளைஞனை மிதிகம பிரதேசத்திற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

காதலனை கொலை செய்த பெண் - போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது | Woman Killed A Young Man With Sharp Weapons

கொலைசெய்யப்பட்ட இளைஞன் குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மஹரகம பிரதேசத்தில் மறைந்திருந்த 15 ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டு மாத்தறை திஹாகொட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சிலதினங்களுக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கொலையில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.