கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் -2023 இற்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன.

கரைச்சிப் பிரதேச சபைக்காக, முதன்மை வேட்பாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் உட்பட வட்டார ரீதியாக 21 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 17 பேர் உள்ளடங்கலான 38 வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக முதன்மை வேட்பாளர் திரு.சுப்பிரமணியம் சுரேன் உட்பட வட்டார ரீதியாக 8 பேர் மற்றும் பொதுவேட்பாளர்களாக 8 பேர் உள்ளடங்கலான 16 வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.