கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகன விபத்தில் கரடி உயிரிழப்பு!!

கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 17.01.2023 அன்று இரவு 10.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தக் கரடி உயிரிழந்துள்ளது.
இந்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக தெருவில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனம் செலுத்தியதால் விலைமதிப்பற்ற இந்த விலங்கின் உயிர் பறிபோனது.
சுற்றுச்சூழல் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாரம்பரியம். அவர்களைப் பாதுகாப்பது உங்கள் மற்றும் எமது பொறுப்பு. குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் வழியாக இரவில் வாகனம் செலுத்தும்போது கவனமாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் – கிளிநொச்சி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.