மன்னார் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் பல்வேறு தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ‘ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.