ஒரு பெண்ணுக்காக இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு

ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

சந்தேகநபரின் துப்பாக்கி வவுலுகல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வைக்கோல் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.