வீட்டில் நிர்வாணமாக இருந்த சடலம்

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் பிற்பகல் இறந்தவருடன் வீட்டில் தங்கியிருந்த மற்றவர் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இறந்து கிடப்பதாக, இறந்தவரின் சகோதரருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இறந்தவரின் சகோதரர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ​​இறந்தவர் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.