8,000 புதிய ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம் – கல்வி அமைச்சு

விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா கற்கைநெறியை முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் குறித்த துறைக்கு வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த கல்வி தவனை பருவத்திற்கு முன், இக்குழுவினர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அரச ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.