சாவகச்சேரிப் பொலிஸாரால் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியில் 19/01 வியாழக்கிழமை பிற்பகல் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹேந்திரா பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சாவினை கொண்டு சென்ற சமயம் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலிதவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் டார்வின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 352கிராம் 250மில்லிக்கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன்-பிக்கப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்