அம்பாறையில் தமிழரசு சார்பில் பா.உ கலையரசனால் வேட்புமனு கையளிப்பு ..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம்(21)  வேட்புமனு கையளிப்புச் செய்தது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற உள்ளூராட்சி மன்றங்களில்   போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களே இன்று கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சட்டத்தரணி எம்.ஏ அன்சீல் தலைமையில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.