தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் – ஜெயசிறில்

மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை  ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

தமிழரசுக்கட்சி வடகிழக்கு 8 மாவட்டங்களில் வீட்டு சின்னத்தில் தனித்து   போட்டியிடுகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பங்காளிக்கட்சிகள் பிரிந்து கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமையே அதற்கான காரணமாகும்.குறிப்பாக இந்த தேர்தல் முறைமையினால் இவ்வாறான பிரிவு நிலை ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 7 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுகின்றது.இதில் அழிவின் விழிம்பு வரை காரைதீவு நாவிதன்வெளி பிரதேச சபைகள் இருந்து வருகின்றன.இரு சமூகங்களும் வாழுகின்ற சபைகளாக இவ்விரு சபைகளும் இருக்கின்றன.

தற்போது காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ஒரு மைதானத்தில் விளையாடுவது போன்று இறக்கப்பட்டுள்ளார்கள்.12 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் 11 ஆசனங்களுக்காக 196 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் வேட்பாளர்கள் ஏன் களமிறங்கியுள்ளார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.
மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் இத்தேர்தலில் மேற்கூறியவர்கள் இறங்கியுள்ளனர்.எனவே  எமது இருப்பை தக்கவைக்க வாக்களியுங்கள்.போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற கட்சிகள் சுயேட்சைக்குழுக்களின் செயற்பாட்டிற்கு மக்கள் துணை போக கூடாது.எமது ஆட்சிக்காலத்தில் பல விடயங்களை இச்சபையில் இருந்து மேற்கொண்டுள்ளோம்.எமது செயல்களையும் நாங்கள் செய்த செயற்பாடுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம்.
நிச்சயமாக இம்முறையும்  வீட்டுச்சின்னத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இந்த மக்களைசில சுயேட்சைக்குழுக்களும் கட்சிகளும்  மூளைச்சலவை செய்ய முற்படுகின்றன.எனவே போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.