புதையல் பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (22) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபர் உடல்நலக்குறைவு காரணங்களால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மொரகஹகந்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேகநபர்கள் 36 மற்றும் 42 வயதுடைய கந்தர மற்றும் களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பொருட்களை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (23) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.