இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் மீது இருக்கும்- இ.கதிர்

இ.கதிர்_ ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

முதலிலே அடிப்படை தீர்வினை பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக நீண்டகால நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்பதனை இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெயங்கர் தெரிவித்ததாகவும் இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் மீது இருக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் இ.கதிர் தெரிவித்தார்.

*தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட்டுகின்றது. வீட்டுச் சின்னம் தான் தமிழர்களுடைய சின்னம் என்றும் தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய கட்சி என்றும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சி இல்லாத
5 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றது முதல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்த எம் ஏ சுமந்திரன் அவர்களும் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இ.கதீர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.