சட்டவிரோதமான பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமையப்பெற்று நடைபெற்று வந்த பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி இன்று காலை 10 மணியளவில் மறவன்புலோ தனங்கிழப்பு மக்கள் கூட்டாக ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர்.

தனங்கிழப்பு
மற்றும் மறவன் புலவு கிராமத்து நடுவே குறித்த பண்ணை அமைந்துள்ளது. இப் பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு உணவாக வைத்தியசாலை கழிவுகள் உணவகங்களில் கழிக்கப்படும் கழிவுகள் இறைச்சிக்கடை மீன் கடைகளில் வீசப்படும் எஞ்சிய கழிவுகள் ஆகியவற்றை சேமித்து பன்றிகளுக்கான உணவாக வழங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பன்றிகளுக்கு போடப்படும் உணவு கழிவுகளை காகங்கள் தூக்கி வந்து குடிநீர் கிணற்றுக்குள் வீசுவதாகவும் இதனால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பல முறை மக்கள் எழுத்து மூலமாக அதிகாரிகளுக்கு முறையிட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச சபை தலைவரை தொடர்பு கொண்ட போது குறித்த பண்ணைக்கு எந்தவித அனுமதியும் பிரதேச சபை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டதுசுகாதார உத்தியோகத்தர்களினால் குறித்த பண்ணை சுகாதார சீர்கேடு சரி செய்யப்பட வேண்டும் என எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டும் எந்த விதமான முன்னேற்றமும் இடம் பெறவில்லை இந்த நிலையில் குறித்த பண்ணை முன்பாக ஒன்று கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அகற்று அகற்று பண்ணையை அகற்று வைத்தியசாலை கழிவுகளை எமது கிராமத்தில் கொட்டாதே எமது கிராமத்தில் எம்மை வாழ விடு போன்ற வாசகங்களை தாக்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சாவகச்சேரி போலீசார் பண்ணையின் நிலைமைகளை அவதானித்துடன் மக்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர் மக்களின் கோரிக்கையினை ஏற்று பண்ணையின் உரிமையாளர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அனுமதி இன்றி நடாத்தப்பட்டுவரும் குறித்த பண்ணைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை முறைபாடு பதிவு செய்ய போலீஸ் நிலையம் வருமாறும் போலீசார் அழைத்துச் சென்றனர் அங்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.