தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி நூலகத்தினால் பரிசளிப்பு நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம்
ஓக்டோபர் 2022 “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொணிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையினால் பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது அந்த வகையில் அதன் இறுதி பரிசளிப்பு நிகழ்வானது 20/01/2023 வெள்ளிக்கிழமை காலை 10. 30 மணியளவில் பாடசாலை நூலகத்தில் நூலக உதவியாளர் சி. சிறிக்காந்தன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தலைப்பில் நூலகத்தின் முக்கியத்துவம் என்பவற்றினை மாணவர்களுக்கிடையிலும், கிராம மக்களிடையும் தொடர்பினை எடுத்துக்காட்டும் முகமாக பல நிகழ்வுகள் இடம்பெற்று இருந்தது மேலும் பாடசாலையில் மிகவும் வறுமையில் உள்ள 05 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்க்கு நடைபெற்று முடிந்த போட்டி நிகழ்வுகளில் கடமை புரிந்த நடுவர்களான திரு. N. ரேகன், திரு.K. சுதர்சன், திருமதி.T. பிரிய தர்சினி திருமதி. V. மஞ்சுளா ஆகிய நடுவர்களும், அதிதியாக கலந்து சிறப்பித்தத்துடன் மேலும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் நூலக உறுப்பினர் திருமதி கோ. கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலே இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.