உள்ளூராட்சி சபைத் தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் தாக்கல் செய்தன.

(க.கிஷாந்தன்)

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள்  (21.01.2023) தாக்கல் செய்தன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும், மேலும் சில சுயேட்சைக்குழுக்களுமே இவ்வாறு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.

2023 உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்   (21.01.2023) அன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.  நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் 12 உள்ளாட்சிசபைகள் உள்ளன.

உள்ளூராட்சிசபைத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.