கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே கூறுகிறார்.

தொலைதூர வைத்தியசாலைகளில் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலை யிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.