உள்ளூராட்சித் தேர்தல் : செலவுகளைக் குறைக்கமின்னணு வாக்களிப்பை அறிமுகப்படுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் செலவினங்களைக் குறைக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு (இ-வாக்களிப்பு) முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இலத்திரனியல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்துவது செலவுகளைக் குறைக்க உதவும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்துவது செலவுகளைக் குறைக்கும் மற்றும் தற்போதைய காகித நெருக்கடிக்கு இது ஒரு தீர்வாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

“இ-வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய உதவியைப் பெறுவது சாத்தியமாகும், மேலும் பத்து நாட்களுக்குள் அதைச் செய்ய முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவும் கலந்து கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இலங்கை இழக்கச் செய்யும் என்பதால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு வரவு வைக்கப்பட்டுள்ள நிதியை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கும் பயன்படுத்த முடியும் என இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.