காஞ்சிரங்குடா பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கி வைப்பு…

திருக்கோவில் கல்வி
வலய காஞ்சிரங்குடா அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் 21/01/2023 காலை 11.30 மணியளவில் இன்று இணைந்த கரங்கள் அமைப்பினால் 46 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. செல்லத்துரை கலைக்குமார் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றது.

இப் பிரதேச மக்கள் பழங்குடி இனத்தவர்களாகவும் வேட்டைத் தொழிலையே பிரதான தொழிலாக உள்ளனர் மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் பாடங்களை வீட்டிற்க்கு சென்று மீட்டல் பயிற்சியினை தொடர முடியாதவர்களாக குடும்ப கஸ்ர நிலைமை காரணத்தினால் அவர்களின் கல்வியில் நாட்டம் செலுத்துவதில்லை ஏன பாடசாலையின் அதிபர் தனது உரையிலே தெரிவித்தார்.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்களான இ.தம்பித்துரை,
கி.கிருதாசன், க.விநாயகமூர்த்தி, நா.விவேக், திருமதி. வி. சத்திய சேகர, திருமதி.மா. கமலராஜன், திருமதி.பி.காந்தசாமி,
திருமதி. சுதா சுரேஸ்குமார் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான லோ. காஜருபன், சி.காந்தன், சங்கீத்,சி. துலக்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.