மட்டக்களப்பில் வேன்-பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலி;ஐவர் படுகாயம்

வேன் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன் 5 பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று மாலை வாழைச்சேனையின் புனாணை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


புத்தளத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வேனும் கல்முனை நோக்கிச் சென்ற பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில் வேனில் பயணித்த 3 மாத ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் எம். எச். மசூத் (வயது 80) என்பவரும் உயிரிழந்தார்.

வேனில் பயணித்தவர்களில் காயமடைந்த 18 மாத குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.