புதிய அமைச்சரவை பட்டியல் தயார்!

பெப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு புதிய அமைச்சு பதவிகள் கிடைக்கப் போவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வந்த வஜிர அபேவர்தன மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவருக்கும் இந்த புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி எஸ்.எம் சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சி.பி.ரத்நாயக்க ஆகியோர் இந்த புதிய அமைச்சுப் பதவியை பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்