தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் எம்.பியே உடைத்தார்-செல்வம் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான்.


தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிமுகம் நேற்று நடை பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியினர் இழுத்தடித்து விட்டு இறுதியில் சொல்வார்கள் நாம் கேட்கும் ஆசனங்களைத் தர முடியாது என்று. அப்போது நாங்கள் வெளியில் வரமுடியாது. வந்தால் மக்கள் என்ன கருதுவார்கள் என்றால் இவர்கள் ஆசனம் இல்லை என்று வெளியே வந்தார்கள் என்று. தமிழரசினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை.

அனைவரும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்று நாங்கள் சொன்னபோது சம்பந்தன் சொல்கிறார் நல்ல விடயம் வாருங்கள் என்கிறார். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுமந்திரன் சொல்கிறார் “இல்லை எங்களுக்கு இரண்டு மூன்று பேரில் உடன் பாடு இல்லை அதனால் சேர்வது கஷ்டம்” என்கிறார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான் என்றும் சொன்னார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.