பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சாணக்கியன் சவால்

பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - சாணக்கியன் சவால் | Sri Lanka Political Crisis

நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நேற்றைய தினம் ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது அதாவது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நேற்றைய தினம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது தாங்கள் இலங்கையில் 25 மாவட்டங்களிலே போட்டியிடுவதாகவும், யாழ் மாவட்டத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக கூறியிருக்கின்றார்.

நாங்கள் பல வருடங்களாக படகு என்பது மொட்டினுடைய ஒரு முகவர். மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் சந்திரகுமார் ஒரு பேட்டியிலே கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சபைகளில் நாங்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி இருந்தார் தேர்தலுக்கான கட்டு பணம் செலுத்தினாலும் கூட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அந்த பட்டியலில் பொதுஜன பெரமுனவின் பெயர் இல்லை.

இவை எமக்கு பாரிய சந்தேகமாக இருந்தது. எங்களுடைய அனைத்து சந்தேகங்களையும், இன்று பசில் ராஜபக்ச  படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன தேர்தலிலே போட்டியிடுகிறார்கள் என்பதை உறுதியாக கூறி இருக்கின்றார்.

இதுவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பிலே எதுவித கருத்துகளும் தெரிவிக்கவில்லை இதை விட கருத்து சொல்லியும் அவசியம் இல்லை ஏன் என்றால் பொதுஜன பெரமுனவும் படகும் ஒன்று.

2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை நாசமாக்கியது பொதுஜன பெரமுன கட்சி இந்த நாட்டிலே விவசாயிகளுக்கு உரம் இல்லாமல் நடுத்தெருவிலே விட்டது இந்த கட்சி, எங்களுக்கு தொடர்ச்சியாக மின்வெட்டுகளை தந்து கொண்டிருக்கின்றது இந்த கட்சி, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த கட்சி, விவசாயிகளின் நில்லுக்கு சரியான விலையினை இல்லாமல் செய்தது இந்த கட்சி, எங்களுடைய பகுதிகள் காணப்படும் மண் வளங்களை கொள்ளையடிப்பதற்கு வந்தது இந்த கட்சி.

இவ்வாறு பொதுஜன பெரமுன என்ற கட்சி இலங்கையிலிருந்து கட்சியினுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய ஒரு சூழல், பொதுஜன பெரமுனவின் அதிபர் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய ஒரு சூழல், பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் அமெரிக்காவில் ஓடி ஒழிக்க வேண்டிய சூழல், பொதுஜன பெரமுனவின் காரியாலயங்கள் இலங்கை முழுவதும் குறிப்பாக மட்டக்களப்பிலும் உடைக்கப்பட்டது மக்களினால்.

இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனை என்ற கட்சி போட்டி போட முடியாத நிலையிலே பொதுஜன பெரமுனவை மறைமுகமாக படகு சின்னத்தின் ஊடாக, மொட்டு சின்னத்துக்கு பதிலாக, போட்டி போடுவதற்கு எங்களுடைய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசத்துறை சந்திரகாந்தன் எடுத்த அந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றப் போகின்றீர்கள் பொதுஜன பெரமுனவில் போட்டியிடப் போகின்றீர்கள் என்றால் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுகின்றோம் என கூறுங்கள் அதைவிடுத்து நாங்கள் படகு சின்னத்தில் போட்டியிடுவோம் என பொதுச்செயலாளர் கூறுகின்றார். உங்களுடைய எஜமான் பசில் ராஜபச கூறுகின்றார் இல்லை நாங்கள் படகு சின்னத்தில் தான் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம் என்று.

டக்ளஸ் தேவானந்தாவை போல் துணிச்சலாக இருங்கள் பிள்ளையான், ஒரு முதுகெலும்புள்ள ஆளாக நில்லுங்கள், ஓம் நாங்கள் பொதுஜன பெரமுன தான் என்று. ஏன் உங்களுக்கு மாத்திரம் இந்த இரட்டை வேடம் மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கின்றீர்களா.

நேற்றைய தினம் முதலாவது அடி வாழச்சேனை பிரதேச சபையிலே, நினைத்திருந்தால் வாகரையையும் நாங்கள் எடுத்திருப்போம் ஆனால் வாகரை மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய ஏமாற்றத்தை உணர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இந்த தேர்தலிலே மக்கள் அதை வெளிக்கொண்டு வருவார்கள்.

வாகரைக்கு போக முடியாத நிலை வாகரையில் பெண்கள் செருப்பை கழட்டி காட்டினார்கள் இன்று இந்த வட்டாரங்களில் வேட்பாளர்கள் பிச்சை எடுப்பது போல் தேடித் திரிகிறார்கள்.

இந்த உள்ளூராட்சி தேர்தலிலே எமது மாவட்ட மக்கள் தெளிவான ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும். 26,28 வயதினிலே ஜீவன் தொண்டமானுக்கு அதிபர் கபினட் அமைச்சு பதவியினை வழங்கி இருக்கின்றார் இது சாதாரண அமைச்சல்ல நீர் வழங்களுக்கான அமைச்சு நாடு முழுவதும் வேலை செய்யக்கூடியதற்கான அமைச்சு.

இங்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது வியாழேந்திரன் என்ன அமைச்சு பதவி என்றே தெரியாது. வேலை செய்தால் தானே பதவி தெரியும். மட்டக்களப்பு மாவட்ட மக்களினுடைய வாக்குகளை பெற்று என்ன செய்திருக்கின்றார்கள் இரண்டு ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு அவர்கள் வாகனத்தில் செல்வதுதான் மாவட்டத்தில் நடைபெறுகின்றது. நடைபெற்ற ஒரு வேலையேனும் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அடிமட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை இரண்டு லட்சம் பெற்று விட்டு கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. செங்கலடி வேப்பவெட்டுவான் எனது சொந்த இடம் ஆனால் இன்று அத்திப்பட்டி மாதிரி ஒரு நிலையில் காணப்படுகின்றது ஏனென்றால் மண்ணை எடுத்து குடிநீர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

தொல்பொருள் என்ற போர்வையில் குசலான மலைப் பகுதிகளில் காணிகளை அபகரிக்கின்றார்கள் வெல்லாவெளி பகுதியில் மாவட்ட அபிவிருத்தி குழுவால் தொல்பொருளுக்கென 15 லட்சம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள்.

இன்று மாவட்டத்தில் எத்தனையோ வேலைகள் காணப்படுகின்றது தொடங்கி வேலைகள் முடிக்கப்படாத நிலையில் பாடசாலைகளிலும் நிறைய வேலைகள் காணப்படுகின்றது. பெப்ரவரி நான்காம் திகதி நாட்டினுடைய 75வது சுதந்திர தினம் தமிழர்களை பொறுத்தவரையில் கருப்பு தினம் அது குறித்தும் எதிர்வரும் காலங்களிலே நாங்கள்  மாவட்டத்திலே சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு இருக்கின்றோம் அது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.