சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பட்ரிசியா ஸ்கொட்லண்ட்!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த வாரமளவில் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பட்ரிசியா ஸ்கொட்லண்ட்! | Commonwealth General Secretary Visit To Sri Lanka

 

இந்தநிலையில் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் எதிர்வரும் முதலாம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாள் பயணத்தில், அவர் அதிபர் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார். அத்துடன் பெப்ரவரி 3 திகதியன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடம் தொடர்பில் அவர் விரிவுரை ஆற்றவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.